டெல்லியில் துவங்கியது பிரியங்காவின் பிரமாண்ட பேரணி

  Newstm Desk   | Last Modified : 08 May, 2019 05:38 pm
priyanka-gandhi-vadra-and-congress-north-east-delhi-candidate-sheila-dikshit-hold-a-roadshow-in-brahmpuri

மக்களவை தேர்தலில் டெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, அந்த கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா வாத்ரா பிரசாரம் செய்து வருகிறார். இதை முன்னிட்டு, டெல்லியில் அவர் பங்கேற்கும் பிரமாண்ட பேரணி துவங்கியது. 

காங்கிரஸ் தலைவர் ராகுலின் சகோதரியும், சாேனியாவின் மகளுமான பிரியங்கா வாத்ரா, அந்த கட்சியின் உத்தர பிரதேச மாநில கிழக்கு பகுதி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். கட்சியில் பொதுச் செயலர் பதவி கிடைத்தை அடுத்து, அவர், உ.பி., மற்றும் டெல்லியில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, தீவிர பிரசாரம் செய்து வருகிறார். 

இந்நிலையில், வட கிழக்கு டெல்லியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும், டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா திட்சித்தை ஆதரித்து, பிரியங்கா வாத்ரா தன் பிரசாரத்தை துவக்கியுள்ளார். பிரம்மபுரி பகுதியில் நடைபெற்று வரும் பிரமாண்ட பேரணியில், பிரியங்காவுடன், ஷீலாவும் பங்கேற்று, வாக்கு சேகரித்து வருகிறார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close