காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி முறிவு?

  Newstm Desk   | Last Modified : 08 May, 2019 08:45 pm
jd-s-snaps-ties-with-congress-for-karnataka-local-body-polls

கர்நாடக மாநிலத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதாக, ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் அறிவித்துள்ளது.  இதனால் அங்கு, அக்கட்சியுடனான காங்கிரஸின் கூட்டணி முறியும் நிலை ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில், காங்கிரஸ் -மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இருப்பினும், ஆட்சி அமைத்த நாள் முதலே, இருகட்சிகளுக்கு இடையே பனிப்போர் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

"காங்கிரஸ் கட்சியினர் என்னை ஒரு மாநிலத்தின் முதல்வராக மதிக்காமல், குமாஸ்தாவை போல நடத்துகின்றனர்" என்று ஒருகட்டத்தில் கர்நாடக  முதல்வர் குமாரசாமி புலம்பும் அளவுக்கு இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

இருப்பினும், அண்மையில் அங்கு நடைபெற்று முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில், வேறு வழியின்றி, மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. "அத்தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி கிடையாது.  எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும்  இதே  நிலைபாடுதான்.  மக்களவைத் தேர்தல் என்பதால், தற்போது காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ளோம்" என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவர் அடகுர் ஹெச். விஸ்வநாத் இன்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி விரைவில் முறியும் நிலை ஏற்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close