போர்க்கப்பலில் சுற்றுலா சென்றவர் தான் ராஜீவ் காந்தி : மோடியின் அடுத்த தாக்குதல்!

  கிரிதரன்   | Last Modified : 08 May, 2019 10:28 pm
gandhi-family-used-ins-virat-as-personal-taxi-during-vacation-modi

இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐஎன்எஸ் விராட்டை, தங்களது சொந்த காரை போல பயன்படுத்தி சுற்றுலா சென்றவர்கள் தான் ராஜீவ் காந்தி குடும்பத்தினர். இது தேசப் பாதுகாப்புக்கு எதிரான செயல் ஆகாதா? என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வியெழுப்பியுள்ளார்.

மக்களவைத் தேர்தலையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பிரமாண்ட பேரணி, தலைநகர் டெல்லியில் இன்று மாலை நடைபெற்றது. பேரணியின் முடிவில், ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் மோடி பேசியதாவது:

கடந்த 1987 -ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த சமயம். அப்போது அவர், இந்திய கடற்படையின் போர்க்கப்பலான  ஐஎன்எஸ் விராட்டில், தமது குடும்பத்துடன் 10 நாள்கள் லட்சத்தீவுக்கு சுற்றுலா சென்றார்.

அவர்கள் அங்கிருந்த 10 நாட்களும், விராட் போர்க்கப்பல் லட்சத்தீவிலேயே நிறுத்தப்பட்டிருந்தது. அத்துடன், ராஜீவ் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பணிவிடைகள் செய்ய, கடற்படை அதிகாரிகள் சிலரும் லட்சத்தீவுக்கு அனுப்பப்பட்டனர்.

போர்க்கப்பலில் யாராவது சுற்றுலா சென்றதை, உலகில் வேறெங்காவது கேள்விப்பட்டிருக்கிறோமா? ஆனால், இந்தியாவில், காங்கிரஸ் ஆட்சியில் மட்டுமே இந்தக் கூத்துக்கள் எல்லாம் நடக்கும்.

கடல் எல்லையில் பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள வேண்டிய கப்பலை, ராஜீவ் காந்தி தமது சொந்த காரைப் போல பயன்படுத்தியுள்ளது, நாட்டின் பாதுகாப்புடன் சமரசம் செய்து கொண்டதாக அர்த்தப்படாதா? என்று பிரதமர் மோடி கேள்வியெழுப்பியுள்ளார்.

"ஃபோபர்ஸ் பீரங்கி ஊழல் காரணமாக, நம்பர் ஒன்  ஊழல்வாதியாக இறந்தவர் தான் ராஜீவ் காந்தி" என்று, பிரதமர் மோடி அண்மையில் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close