விவசாயிகளின் நிலத்தை பறித்த காங்கிரஸ்: மோடி பேச்சு !

  Newstm Desk   | Last Modified : 09 May, 2019 07:28 am
modi-speech-about-congress

ஹரியானா மாநிலம், குருசேத்திரத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, விவசாயிகளின் நிலத்தை காங்கிரஸ் கட்சியினர் பறித்துள்ளதாகவும், ஊழல் பயிரை அவர்கள் அறுவடை செய்துள்ளதாகவும் பேசினார். 

வரும் 12-ஆம் தேதி மக்களவைத் தேர்தலை சந்திக்கவுள்ள ஹரியானா மாநிலம், குருசேத்திரத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது. “காங்கிரஸ் கட்சி தனது அன்பு அகராதியில் இருந்து என்னை நோக்கி தவறான வார்த்தைகளை வீசி வருகிறது” என வேதனையுடன் அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தன்னை புழு பூச்சி, பைத்தியக்கார நாய், பத்மாசூரன், குரங்கு என்றெல்லாம் விமர்சித்து வருகின்றனர். அவர்கள் எனது தாயைப் பற்றி கூட அவதூறான வார்த்தையை உபயோகித்தனர் என பேசினார்.  

ஹரியானா நில மோசடி தொடர்பாக விசாரணையை சந்தித்து வரும் பூபேந்தர் சிங் ஹூடா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா ஆகியோரின் பெயரைக் குறிப்பிடாமல்,  விவசாயிகளின் நிலத்தை காங்கிரஸ் கட்சியினர் பறித்துள்ளதாகவும், ஊழல் பயிரை அவர்கள் அறுவடை செய்தனர் எனவும் மோடி குற்றஞ்சாட்டினார்.  தொடர்ந்து பேசிய அவர், மே 23-ஆம் தேதி மாலை தேர்தல் முடிவுகள் வெளிவரும், மக்களின் ஆசியும் மீண்டும் நமது அரசுதான் வரப்போகிறது என்றும் பேசினார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close