நட்சத்திர வேட்பாளருக்கு பொதுஇடத்தில் வைத்து "இச்" கொடுத்த இளம்பெண் !

  கிரிதரன்   | Last Modified : 09 May, 2019 10:01 pm
sunny-deol-was-kissed-on-his-cheek-by-a-woman-during-his-roadshow-in-batala-punjab

பிரபல நடிகரும், பாஜகவின் நட்சத்திர வேட்பாளருமான சன்னி தியோல், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு வரும் 12 -ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இதையொட்டி, குருதாஸ்பூர் தொகுதிக்குட்பட்ட பேட்டாலா பகுதியில் இன்று அவர், திறந்தவெளி காரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது சாலை திரண்டிருந்த கூட்டத்திலிருந்து திடீரென இளம்பெண் ஒருவர் சன்னி தியோலின் காரை நோக்கி வந்தார். 

அவரை தியோல் தன் அருகில் அழைக்கவே, இருப்பு கொள்ளாமல் வேகமாக காரின் மீது ஏறிய அந்தப் பெண், சன்னி தியோலின் கன்னத்தில் நச்சென்று "இச்" கொடுத்து, அவரை வாழ்த்தி வழியனுப்பினார். பொது  இடத்தில் ஒரு இளம்பெண்,  வேட்பாளருக்கு முத்தம் கொடுத்த நிகழ்வு அங்கு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close