சிறுபான்மையினர் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எதிர்கட்சிகள்: நிதின் கட்கரி 

  Newstm Desk   | Last Modified : 10 May, 2019 08:12 am
nithi-katkari-press-interview

தேர்தல் ஆதாயத்துக்காக சிறுபான்மையினர் மத்தியில் அச்சுறுத்தலை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்துவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குற்றஞ்சாட்டியுள்ளார். 

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சரும், பாரதிய ஜனதாவின் மூத்த தலைவருமான நிதின் கட்கரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  தேர்தல் ஆதாயத்துக்காக எதிர்க்கட்சிகள் மக்களை சமுதாய ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் வேறுபடுத்துவதுடன், சிறுபான்மையினர் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் குறிப்பட்டார். பாரதிய ஜனதா கட்சி முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என குறிப்பிட்ட அவர், பயங்கரவாதிகளுக்கு தான் எதிரானது  எனக் கூறினார். 

மேலும், பாரதிய ஜனதா தனித்தே 271 இடங்களில் வெற்றிபெறும் எனவும், கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மக்களுக்கு ஆற்றிய பணிகளின் அடிப்படையில் பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வரும் எனவும் நிதின் கட்கரி குறிப்பிட்டார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close