ஆம்...காங்., ஆட்சியில் படுகொலை நடந்தது, அதனால் என்ன? முன்னாள் பிரதமரின் ஆலோசகர் ‛அசால்ட்’ பதில்

  Newstm Desk   | Last Modified : 10 May, 2019 07:49 pm
congress-distancing-itself-from-sam-pitroda-s-1984-mein-hua-to-hua-shocker


முன்னாள் பிரதமர் இந்திரா படுகொலையை தொடர்ந்து, பஞ்சாப் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், 1984ம் ஆண்டு, சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தில், ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். இதை, அன்றைய பிரதமர் ராஜிவ் தலைமையிலான அரசு தடுக்க தவறிவிட்டதாக, அந்த கலவரம் தொடர்பாக விசாரணை நடத்திய நானாவடி கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இந்த கலவரத்தில் காங்கிரஸ் கட்சியினருக்கு முக்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில்,  இது குறித்து, செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் ராஜிவின் தொழில்நுட்ப ஆலோசகரும், காங்கிரஸ் தலைவர்களுக்கு மிக நெருக்கமாவருமான சாம் பிட்ரோடா மிகவும் அலட்சியமாக பதில் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஆம்... 1984ம் ஆண்டு கலவரம் நடந்தது அதற்கு என்ன இப்போ? என பதில் அளித்தார். தவிர, சீக்கியர் படுகொலை கவலரம் சம்பவத்தை மிக சாதாரணமாக பேசிய அவர், தற்போதைய பா.ஜ., அரசின் செயல்பாடுகளை விமர்சித்தார். 

இந்நிலையில், பிட்ரோடாவின் பேச்சுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை, என அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர், ரன்தீப் சுர்ஜேவாலா அறிக்கை வெளியிட்டுள்ளர். அதில் அவர் கூறியிருப்பதாவது: ‛‛1984ம் ஆண்டு பஞ்சாப்பில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட கலவரத்தில் தொடர்புடையோர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில், காங்கிரஸ் கட்சிக்கு மாற்றுக் கருத்தில்லை. அதே சமயம், சாம் பிட்ரோடா அல்லது வேறு யாரின் கருத்துக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது’’ என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close