ஹிந்தி தெரியாததால் உளறிவிட்டேன்: சாம் பிட்ரோடா மழுப்பல்

  Newstm Desk   | Last Modified : 10 May, 2019 08:13 pm
the-statement-i-made-was-completely-twisted-sam-pitroda

‛‛சீக்கியர் படுகொலை சம்பவம் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த போது, ஹிந்தி தெரியாததால் உளறிவிட்டேன். என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது’’ என, சாம் பிட்ரோடா தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். 

1984ம் ஆண்டு, சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதில், காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், இது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த, முன்னாள் பிரதமர் ராஜிவின் தொழில்நுட்ப ஆலோசகர், சாம் பிட்ரோடா, ஆம்... நடந்தது நடந்துவிட்டது அதனால் என்ன? எனக் கூறினார். 

சாம் பிட்ரோடாவின் அலட்சியமான பதிலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என, காங்கிரஸ் கட்சி ஜகா வாங்கிவிட்டது. அவரின் இந்த கருத்துக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனக் குரல் எழுந்துள்ளது. இந்நிலையில், தன் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக, சாம் பிட்ரோடா விளக்கம் அளித்துள்ளார். 

இது குறித்து பிட்ரோடா கூறியதாவது: ‛ஹுவா தோ ஹுவா’ என ஹிந்தியில் பதில் அளித்தேன். அதற்கு, ஆனது ஆகிவிட்டது எனப் பொருள். எனக்கு ஹிந்தி தெரியாததால், உளறிவிட்டேன். ‛ஹுவா தோ புரா ஹுவா’ என சொல்ல நினைத்தேன். அதாவது, ஆனது தவறாக ஆகிவிட்டது எனக் கூற வந்தேன். எனக்கு ‛புரா’ அதாவது ‛தவறான’ என்ற பொருள் தரும் வார்த்தை நினைவுக்கு வராததால், உளறிவிட்டேன். என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close