தேர்தலில் பா.ஜ., வென்றால் அமித் ஷா தான் உள்துறை அமைச்சர்: கெஜ்ரிவால் ஆரூடம்

  Newstm Desk   | Last Modified : 10 May, 2019 08:52 pm
amit-shah-will-be-home-minister-if-bjp-returns-arvind-kejriwal

‛‛மக்களவை தேர்தலில் பா.ஜ., வென்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்தால், அந்த கட்சியின் தலைவர் அமித் ஷா தான் நாட்டின் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்பார். அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தால், இந்த நாடு என்ன நிலைக்கு ஆளாகும் என எண்ணிப் பார்த்து வாக்களியுங்கள்’’ என, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். 

ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால், டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது: ‛‛குஜராத் மாநில முதல்வராக நரேந்திர மாேடி பதவி வகித்த போது, அமித் ஷா தான் மாநில உள்துறை அமைச்சராக இருந்தார். அப்போது தான் போலி என்கவுன்டர்கள் நடத்தப்பட்டன. 

தற்போது, பா.ஜ., வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆனால், அமித் ஷா தான் நாட்டின் உள்துறை அமைச்சர் ஆவார். அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தால், நாடு எந்த நிலைக்கு ஆளாகும் என எண்ணிப்பார்த்து வாக்களியுங்கள்’’ என, ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close