டெல்லி 'சீட்'டுக்கு கெஜ்ரிவாலுக்கு ரூ.6 கோடி கொடுத்தோம்: வேட்பாளரின் மகன் பேட்டி!

  முத்துமாரி   | Last Modified : 11 May, 2019 04:35 pm
aap-candidate-s-son-says-father-paid-rs-6-crore-to-arvind-kejriwal-for-west-delhi-ticket

மக்களவைத் தேர்தலில் டெல்லி(மேற்கு) தொகுதியில் போட்டியிட, தனது தந்தை கெஜ்ரிவாலுக்கு ரூ.6 கோடி கொடுத்த பின்னரேதாக பல்பீர் சிங் ஜாகரின் மகன் உதய் ஜாகர் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இன்று டெல்லியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் டெல்லி(மேற்கு) தொகுதியில் எனது தந்தை பல்பீர் சிங் ஜாகர் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான விலையாக, கெஜ்ரிவாலுக்கு, எனது தந்தை ரூ.6 கோடி கொடுத்துள்ளார். இதற்கு நானே சாட்சி. அண்ணா ஹசாரே இயக்கத்திற்கும், என் தந்தைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவர் கடந்த ஜனவரி மாதம் தான் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். அ ப்படி இருக்க அவருக்கு ஏன் ஆம் ஆத்மி தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்க வேண்டும்? 

மேலும், 1984 சீக்கியர்கள் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்ட சஜ்ஜன் குமாரை பெயிலில் வெளியில் எடுக்க எனது தந்தை கடும் முயற்சி செய்தார். 

நான் எனது தந்தையிடம் கல்விச்செலவுக்காக பணம் கேட்டேன். அவரோ, தன்னிடம் உள்ள பணத்தை தேர்தலில் போட்டியிட பயன்படுத்தப்போவதாக கூறி எனக்கு பணம் கொடுக்க மறுத்து விட்டார். கல்விக்காக பயன்படாத பணம் அரசியலுக்கு வேண்டுமா? அதனால் தான் இந்த தகவலை வெளியிடுகிறேன் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். 

நாளை டெல்லியில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் சூழலில், இந்த செய்தி ஆம் ஆத்மி கட்சியினரிடையேயும், டெல்லி மக்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close