என் வாழ்க்கை நாட்டிற்கும், நாட்டு மக்களுக்குமானது: பிரதமர் மாேடி உருக்கம்

  Newstm Desk   | Last Modified : 11 May, 2019 07:06 pm
whatever-i-ve-done-it-was-for-the-nation-its-citizens-modi

‛‛என் வாழ்க்கையில் எனக்கென்றோ, என் குடும்பதாருக்கென்றோ எதுவும் கிடையாது. என் வாழ்க்கையே இந்த நாட்டிற்கும், நாட்டு மக்களுக்குமானது’’ என, பிரதமர் நரேந்திர மாேடி பேசினார். 

உத்தர பிரதேச மாநிலம், காஜிபூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில், பா.ஜ., வேட்பாளரை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மாேடி பேசியதாவது: ‛‛நான் குஜராத் மாநிலத்தின் மிக நீண்ட முதல் அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளேன். என்னைப் போல், அந்த மாநிலத்தில் வேறு யாரும் நீண்ட காலம் முதல்வராக இருந்தது கிடையாது. அதே போல், ஐந்து ஆண்டுகளாக நாட்டின் பிரதமராக இருந்து வருகிறேன். 

என் வங்கிக் கணக்கில் எவ்வளவு ரூபாய் உள்ளது என்பதை நீங்கள் பாருங்கள். மாேடியின் பெயரில் ஏதாவது ஒரு பங்களாவாவது இருக்கிறதா எனப் பாருங்கள். எனக்கென்று நான் எதையும் சேர்த்தது கிடையாது. என் உறவினர்களுக்காவும் எதையும் செய்தது கிடையாது. 

என் வாழ்நாள் முழுவதும், நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காவும் தான் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதே போல், நாட்டில் எது நடந்தாலும், காங்கிரஸ் உள்ளிட்ட கலப்பட கூட்டணி கட்சிகளுக்கு கவலை கிடையாது. அவர்கள், எது நடந்தாலும் நடக்கட்டும் என்ற வகையில் தான் இதற்கு முன் ஆட்சி செய்துள்ளனர்’’ என அவர் பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close