கட்சியிலிருந்து நீக்கப்பட்டேன்: முன்னாள் முதல்வர் பேச்சால் சலசலப்பு

  Newstm Desk   | Last Modified : 11 May, 2019 09:08 pm
didn-t-quit-jds-was-expelled-by-hd-deve-gowda

மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியிலிருந்து நானாக விலகவில்லை; கட்சித் தலைவர் தேவகவுடாவால் நீக்கப்பட்டேன் என, கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியதால், காங்., - ம.ஜ.த., கூட்டணியில் திடீர் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

இது குறித்து, காங்., மூத்த தலைவரும், கர்நாடக மாநில முன்னாள் முதல்வருமான சித்தராமையா கூறியதாவது: ‛‛தற்போது, மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள சித்தராமையா, அந்த கட்சியிலிருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தது ஏன் என, பாரதிய ஜனதா கட்சியினர் கேள்வி கேட்கின்றனர். ம.ஜ.த., கட்சியிலிருந்து நானாக விலகவில்லை. முன்னாள் பிரதமர் தேவகவுடா தான் என்னை கட்சியிலிருந்து நீக்கினார். அதனால் தான் நான் காங்கிரசில் சேர்ந்தேன்’’ எனக் கூறியுள்ளார். 

கர்நாடகாவில், காங்., - ம.ஜ.த., கூட்டணி ஆட்சி நடைபெறும் நிலையில், சித்தராமையாவின் இந்த பேச்சு, கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close