மக்களவைத் தேர்தல் : ஆறாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

  Newstm Desk   | Last Modified : 12 May, 2019 08:36 am
mp-election-sixth-phase-polling-begins

மக்களவைத் தேர்தலில் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு  இன்று காலை 7 மணியளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற மக்களவைக்கு மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கெனவே ஐந்து கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இன்று ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறகிறது.

ஜார்கண்ட் - 4, டெல்லி -7 , மேற்கு வங்கம், பிகார் மற்றும் மத்தியப் பிரதேசம் -8, ஹரியாணா -10, உத்தரப் பிரதேசம் - 14 என மொத்தம் 59 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.

இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 979 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close