ஜனநாயக கடமையாற்றிய முக்கிய பிரமுகர்கள்!

  Newstm Desk   | Last Modified : 12 May, 2019 10:51 am
today-s-election-vip-s-whose-poll-their-votes

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இன்று நடைபெற்றுவரும்  தேர்தலில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

டெல்லியில் உள்ள  ஜனாதிபதி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமது குடும்பத்தினருடன் இன்று காலை வாக்களித்தார்.

டெல்லி, ஔரங்கசீப் லேன் பகுதியில் உள்ள என்.பி. உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமது வாக்கினை பதிவு செய்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ஹரியாணா மாநிலம், குருகிராமில் உள்ள பைன்கிரஸ்ட் பள்ளி வாக்குச்சாவடியில், தமது சகோதரருடன் வந்து வாக்களித்தார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முன்னாள் முதல்வர்  ஷீலா தீட்சித், ஹரியாணா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குர் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக வேட்பாளருமான கவுதம் கம்பீர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் இன்று தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close