டெல்லியில் வாக்களித்த முக்கிய பிரமுகர்கள்!

  ஸ்ரீதர்   | Last Modified : 12 May, 2019 12:33 pm
lok-sabha-elections-bjp-candidate-gautam-gambhir-casts-his-vote

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பாஜக வேட்பாளருமான கவுதம் கம்பீர் உள்பட முக்கிய பிரமுகர்கள் டெல்லியில் உள்ள வாக்குச்சாடிகளில் தங்கள் வாக்கினை இன்று பதிவு செய்தனர்.

கவுதம் கம்பீர் டெல்லியின் கிழக்கு பகுதி பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம்ஆத்மி கட்சியின் சார்பில் அதிஷி போட்டியிடுகிறார்.

 

இதேபோன்று, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்,  ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா வதேரா, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவ் உள்பட பல முக்கிய பிரமுகர்களும் டெல்லியில் அமைந்துள்ள வாக்கு சாவடிகளில் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 5 கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று ஆறாம் கட்ட தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற்று வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close