செயல்திறன் கொண்ட அரசுக்கே மக்கள் ஆதரவு: பிரதமர் மோடி பெருமிதம்!

  Newstm Desk   | Last Modified : 13 May, 2019 08:04 am
modi-speech-in-uttar-pradesh

செயல்திறன் கொண்ட அரசுக்கே மக்கள் ஆதரவளித்து வாக்களிக்கின்றனர் எனவும், எதிர்க்கட்சிகள் படுதோல்வியை சந்திக்கும் எனவும் பிரதமர் மோடி தனது பிரசாரத்தில் பேசியுள்ளார். 

மக்களவையின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவை சந்திக்கும் உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று (ஞாயிற்றுக் கிழமை) நேற்று கலந்து பேசினார். அப்போது அவர் செயல்திறன் கொண்ட அரசுக்கே மக்கள் ஆதரவளித்து வாக்களிக்கின்றனர் எனவும், எதிர்க்கட்சிகள் படுதோல்வியை சந்திக்கும் எனவும் பேசினார். 

கூட்டணி அமைத்துள்ள அகிலேஷ் யாதவும், மாயாவதியும் உத்தரபிரதேச முதலமைச்சராக இருவரும் இருந்த மொத்த நாட்களை விட குஜராத் மாநில முதலமைச்சராக நான் அதிக நாட்கள் இருந்துள்ளேன். ஆனால், என் மீது ஊழல் புகாரும் இல்லை என மோடி பேசினார்.  படிந்தது கிடையாது.


மத்தியபிரதேச மாநிலம் காண்ட்வா என்ற இடத்தில் கூட்டத்தில் பேசிய மோடி, இந்து பயங்கரவாதம் என்ற முத்திரையை குத்தி காங்கிரஸ் கட்சி சதி செய்தது எனவும், எத்தனை புனித கயிறுகளை கட்டினாலும், காவி வண்ணம் மீது பயங்கரவாத கறை பூசிய பாவத்தில் இருந்து யாரும் தப்ப முடியாது முடியாது என பேசினார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close