மேற்கு வங்க முதல்வருக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சவால்!

  ஸ்ரீதர்   | Last Modified : 13 May, 2019 03:58 pm
tmc-can-stop-our-rallies-but-can-t-stop-bjp-s-victory-march-amit-shah

ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்பவர்களையெல்லாம் மேற்கு வங்க அரசு கைது செய்கிறது. இதோ நானும் ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழுக்கத்தை முன் வைக்கிறேன், முடிந்தால் என்னை கைது செய்து பார்க்கட்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சவால் விடுத்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜாய்நகர் மக்களவை தொகுதில் பாஜக தேசிய தலைவர் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்பவர்களையெல்லாம் மேற்கு வங்க அரசு கைது செய்து வருகிறது. நான் நாளையும் கொல்கத்தாவில் இருப்பேன். இப்போது நானும் ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தை எழுப்புகிறேன். முடிந்தால் என்னையும் கைது செய்து பார்க்கட்டும் என்றார்.

மேலும் எங்களின் பேரணிகளை மட்டுமே மேற்கு வங்க அரசால் தடுத்து நிறுத்த முடியும் என்றும் பாஜகவின் வெற்றி வாய்ப்பை, அதனால் தடுத்து நிறுத்த முடியாது என்றும் முழக்கமிட்டார். மேற்கு வங்க மாநிலம் பைருபிபூர் தொகுதியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நேற்று பிரசாரம் செய்ய திட்டமிருந்தார்.

ஆனால் அவரின் ஹெலிகாப்டரை தரையிறக்க மேற்கு வங்க அரசு அனுமதிக்கவில்லை. அதனால் அமித் ஷாவின் பிரசாரம் நேற்று ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close