தேர்தலில் வாக்களித்த 150 இரட்டையர்கள்- குழப்பமடைந்த அதிகாரிகள்

  ஸ்ரீதர்   | Last Modified : 13 May, 2019 04:08 pm
polling-brings-double-trouble-in-village-of-twins

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 150 இரட்டையர்கள் ஒரே தொகுதியில் வாக்களித்ததால் தேர்தல் அதிகாரிகள் பெரிதும் குழப்பமடைந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிராயக்ராஜில் உள்ள முகம்மது பூர் உம்ரி என்ற கிராமத்தில் 150 ஜோடி இரட்டையர்கள் உள்ளனர். இவர்களில் 50க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் வாக்களிக்கும் வயதுக்குட்பட்டவர்கள்.

நேற்று இவர்கள் தங்கள் தொகுதியில் நடைபெற்ற 6ஆம் கட்ட வாக்கு பதிவில் வாக்களிக்க சென்றனர். இவர்களை பார்த்த அதிகாரிகள் குழப்பமடைந்தனர். இரட்டையர்களில் பாதி பேர் அச்சு அசலாக ஒருவரை போல் ஒருவர் இருந்ததால் அங்கு குழப்பம் ஏற்பட்டது.

தேர்தல் அதிகாரிகளும் வேறு மாவட்டத்தினர் என்பதால் இரட்டையர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த கிராமத்திலிருந்து வந்த பெரியவர்கள் இரட்டையர்களை அடையாளப்படுத்தி அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close