இளைஞர்களை தவறாக வழிநடத்தும் முன்னாள் முதல்வர்: பிரதமர் மோடி சாடல்

  ஸ்ரீதர்   | Last Modified : 13 May, 2019 05:47 pm
pm-modi-slams-congress-digvijaya-singh-for-not-voting-in-lok-sabha-elections

காங்கிரஸ் கட்சி இளைஞர்களை தவறாக வழி நடத்தி செல்வதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று மத்திய பிரதேச மாநிலம் ராட்லம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான திக்விஜய் சிங் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் வாக்களிக்கவில்லை.

இதன் மூலம் அவர் ஜனநாயக கடமையாற்ற தவறி விட்டார். இதன் மூலம் இளைஞர்களை தவறான பாதையில் காங்கிரஸ் கட்சி அழைத்து செல்கிறது. நான் என்னுடைய வாக்கினை பதிவு செய்ய அகமதாபாத் சென்றேன்.

அதே போல் குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் ஆகியோர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர். ஆனால் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங் வாக்களிக்வில்லை என்பதன் மூலம் அவர் ஜனநாயக கடமையை ஆற்றவில்லை என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close