குழப்பத்தில் உள்ள மம்தா பானர்ஜி அரசு: அமித் ஷா பேச்சு

  Newstm Desk   | Last Modified : 14 May, 2019 09:11 am
amit-sha-s-speech

ஜாய்நகர் தொகுதியில் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமித் ஷா, மம்தா பானர்ஜி அரசு குழப்பத்தில் உள்ளது எனவும், என்னை தடுக்கலாம், ஆனால் பாரதிய ஜனதாவின் வெற்றியை அவரால் தடுக்க முடியாது என குறிப்பிட்டார். 

ஜாதவ்பூரில் அமித் ஷாவின் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், ஜாய்நகர் தொகுதியில் கேனிங் என்ற பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய அவர்,  மம்தா பானர்ஜி அரசு குழப்பத்தில் இருக்கிறது எனவும், தன்னை கூட்டங்களில் பங்கேற்க விடாமல் தடுக்க வேண்டும் என்று மம்தா அரசு நினைப்பதாக தோன்றுகிறது எனவும் குறிப்பிட்டார். மேலும் தன்னை தடுக்கலாம். ஆனால், இந்த மாநிலத்தில் பாரதிய ஜனதாவின் வெற்றியை மட்டும் அவரால் தடுக்க முடியாது எனவும் பேசினார். 

543 தொகுதிகளில் அமித் ஷா இதுவரை 301 தொகுதிகளில் பிரசாரம் செய்திருப்பதாகவும்,  ஜனவரி முதல் அவர் மொத்தம் ஒரு லட்சத்து 51 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் மேற்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close