வறுமை தான் எனது ஜாதி: மணி ஷங்கர் அய்யருக்கு மோடி பதிலடி!

  முத்துமாரி   | Last Modified : 14 May, 2019 02:55 pm
modi-replied-to-mani-shankar-aiyar

எனது ஒரே ஒரு ஜாதி வறுமை தான்; அதனால் தான் நான் வறுமையை எதிர்க்கிறேன் என்று மணி ஷங்கர் அய்யரின் கருத்துக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார். 

காங்கிரஸ் மூத்த தலைவரான மணி ஷங்கர் அய்யர், கடந்த டிசம்பர் 7, 2017ல் குஜராத் சட்டசபை தேர்தலின் போது, 'பிரதமர் மோடி ஒரு தாழ்ந்த சாதியை சார்ந்தவர்' என்று பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சுக்கு, பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தொடர் எதிர்ப்பையடுத்து, அவரை இரண்டு வருடங்களுக்கு பதவியில் இருந்து நீக்கம் செய்தது காங்கிரஸ். 

இந்த நிலையில், 'நான் முன்னதாக கூறியது இப்போது நிரூபிணமாகியுள்ளது' என மணி ஷங்கர் அய்யர் பத்திரிக்கை ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார். இதனால் பிரதமர் மோடியை ஜாதி குறித்து அவர் பேசியது, மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. 

இது தொடர்பாக பிரதமர் மோடி இன்று உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியுள்ளார். அப்போது அவர், "எனது ஒரே ஒரு ஜாதி வறுமை தான்; அதனால் தான் நான் வறுமையை எதிர்க்கிறேன். வறுமையை ஒழிக்க போராடுகிறேன்" என்று மணி ஷங்கர் அய்யரின் கருத்துக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close