ஜனநாயகத்தில் மம்தாவிற்கு உடன்பாடில்லை- ஸ்மிரிதி இரானி

  ஸ்ரீதர்   | Last Modified : 16 May, 2019 02:22 pm
mamata-has-no-faith-in-democracy-smriti

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஜனநாயகத்தில் உடன்பாடில்லை, அதனால் சர்வாதிகாரி போல் நடந்து கொள்கிறார் என்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி ஹிமாச்சல பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். அப்போது  பேசிய அவர் வன்முறை அரசியல் மிகவும் ஆபத்தானது ஆகும்.

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற வன்முறை முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என்பதை வெளிகாட்டியுள்ளது. மேலும் அவர் சர்வாதிகாரி போல் செயல்படுகிறார்.

நேற்று முன் தினம் நடைபெற்ற கலவரத்தை பார்க்கும் பாேது மாநில அரசால் கூட அந்த கலவரத்தை அடக்க முடியவில்லை என்றால் அங்கு ஆட்சி எப்படி இருக்கும் என்பதை ஊகிக்கமுடிகிறது என்றார்.

கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் தான் இந்தியா அமைதியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close