பலாத்கார குற்றவாளியை நீங்களும் ஆதரிப்பதா? மாயாவதிக்கு பிரதமர் மாேடி கேள்வி

  Newstm Desk   | Last Modified : 16 May, 2019 05:10 pm
sp-bsp-has-given-ticket-to-a-person-here-who-is-an-absconder-in-a-rape-case-sp-has-this-history-in-up-people-know-but-behen-ji-will-you-seek-votes-for-such-candidates-modi-asks-mayavati

‛‛பாலியல் பலாத்கார குற்றவாளியை வேட்பாளராக நிறுத்துவது, சமாஜ்வாதி கட்சிக்கு கை வந்த கலை. ஆனால், அதே தவறை நீங்களும் செய்வதா, பலாத்கார குற்றவாளியை ஆதரித்து பிரசாரம் செய்வது நியாயம் தானா’’ என, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிக்கு, பிரதமர் நரேந்திர மாேடி கேள்வி எழுப்பியுள்ளார். 

உத்தர பிரதேச மாநிலம், கோஷி மக்களவை தொகுதியில், சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியின் சார்பில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த அதுல் ராய் களம் இறக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இவர் மீது, வாரணாசியை சேர்ந்த, கல்லுாரி மாணவி, போலீசில் பலாத்கார புகார் அளித்துள்ளார். 

இந்த வழக்கில், தான் கைதாகாமல் இருக்க, அதுல் ராய், முன் ஜாமின் கோரி கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில், மவு மாவட்டத்தில் தேர்தல் பிசாரம் செய்த பிரதமர் மாேடி பேசுகையில் ‛‛பலாத்கார குற்றவாளியை வேட்பாளராக அறிவிப்பது அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சிக்கு வழக்கமான ஒன்று. அதை உ.பி., மக்களும் நன்கு அறிவர்.

ஆனால், அதே தவறை, மாயாவதி அவர்களே நீங்களும் செய்வதா? இது நியாயம் தானா? பலாத்கார குற்றவாளியை வேட்பாளராக அறிவித்ததோடு மட்டுமின்றி, அவருக்கு ஆதரவாக பிரசாரமும் செய்வது நியாயமா?’’ என கேள்வி எழுப்பியுள்ளார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close