மக்களின் முடிவுக்காக காத்திருக்கிறோம்: ராகுல் காந்தி

  முத்துமாரி   | Last Modified : 17 May, 2019 06:28 pm
rahul-gandhi-press-meet

மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதையடுத்து, இன்று  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும்  செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். 

டெல்லியில் நடந்த இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதில் அளித்தார். 

அப்போது அவர், "இந்த தேர்தலில் யார் ஜெயிப்பார்கள் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்.எனவே மக்களின் முடிவே எங்களின் முடிவாக இருக்கும். 

. மே 23ல் மக்கள் தீர்ப்பை மதித்து அதற்கேற்றார் போல காங்கிரஸ் தோழமை கட்சிகள் முடிவெடுக்கும். 

சந்திரபாபு நாயுடு, மம்தா உள்ளிட்ட மாநிலத் தலைவர்களும், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி வர விரும்பவில்லை. 

எனவே எங்களது முதல் நோக்கம் பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பது தான். இரண்டாவதாக காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைக்க முயற்சிப்போம். மக்களின் முடிவுக்காக காத்திருக்கிறோம்" என்று தெரிவித்தார். 

இறுதியாக, "பத்திரிக்கையாளர்களுக்கு மிக்க நன்றி. பத்திரிக்கைகள் மூலமாக தான் நான் வளர்ச்சி அடைந்தேன். உங்களது கேள்விகள் மூலமாகவே என்னை நான் வளர்த்துக்கொண்டேன். நான் தெளிவாக பதில் அளிப்பதற்கு நீங்கள் தான் காரணம். என்னை தெளிந்த ஒரு அரசியல்வாதியாக உருவாக்கிய பெருமை உங்களை சேரும்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close