தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: முதல்வருடன், முதல்வர் சந்திப்பு!

  Newstm Desk   | Last Modified : 17 May, 2019 08:49 pm
chandrababu-meets-kejriwal-at-delhi

மக்களவை தேர்தலின் ஏழாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்த நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று நேரில் சந்தித்து பேசினார். 

நாட்டின், 17வது மக்களவை தேர்தலுக்கான இறுதிகட்ட வாக்குப்பதிவு, நாளை மறுநாள் நடைபெறுகிறது. அதற்கான பிரசாரம் இன்றுடன் ஓய்ந்தது. இந்நிலையில், 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாவதை அடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த ஆலோசனையில், அரசியல் தலைவர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். 

இதன் ஒரு பகுதியாக, தெலுங்கு தேசம் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, டெல்லியில் இன்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, மூன்றாவது அணிக்கான வாய்ப்பு குறித்து முக்கிய பேச்சு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close