மக்களவைக்கான இறுதி கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது!

  ஸ்ரீதர்   | Last Modified : 18 May, 2019 11:56 am
campaigning-for-final-phase-of-lok-sabha-polls-ends

59 தொகுதிகளுக்கான 7ம் கட்ட மக்களவை தேர்தல் நாளை நடைபெறுகிறது. இறுதி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது.

நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, மே 23ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக கடந்த மாதம் 11ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த மக்களவை தேர்தல், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

6 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. கடந்த ஏப்.11ஆம் தேதி தொடங்கிய தேர்தலில், 6 கட்டமாக இதுவரை 483 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், மீதமுள்ள 59 தொகுதிகளில் நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close