7ம் கட்ட மக்களவை தேர்தல்: முக்கிய தலைவர்கள் வாக்குப்பதிவு!

  ஸ்ரீதர்   | Last Modified : 19 May, 2019 10:51 am
uttar-pradesh-chief-minister-yogi-adityanath-castes-his-vote-in-gorakpur

7வது கட்ட மக்களவை தேர்தலில், முக்கிய தலைவர்கள் இன்று காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் நிலையில், இறுதிக்கட்டமான 7ம் கட்ட தேர்தல் இன்று விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. அதிகாலை முதலே மக்கள் வாக்குச்சாவடிக்கு சென்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் வாக்கு சாவடிக்கு காலையிலேயே சென்று தனது வாக்கை பதிவு செய்தார்.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாட்னாவில் உள்ள ராஜ்பவனில் தனது வாக்கை பதிவு செய்தார். பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி, மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான ரவி சங்கர் பிரசாத் ஆகியோர் பாட்னாவில் உள்ள வாக்கு சாவடியில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close