ஹிமாச்சல்: திருமண கோலத்தில் வாக்களித்த புதுமண தம்பதியர்

  ஸ்ரீதர்   | Last Modified : 19 May, 2019 01:58 pm
bridegroom-family-cast-vote-in-himachal-pradesh-s-manali

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் திருமண கோலத்தில் புது மண தம்பதியினர் தங்கள் குடும்பத்தோடு வாக்கு சாவடிக்கு வந்து வாக்களித்தனர்.

நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் நிலையில் இறுதிக்கட்டமான 7ம் கட்ட தேர்தல் இன்று விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. அதிகாலை முதலே மக்கள் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் மணாலி மக்களவை தொகுதியில் இன்று திருமண ஜோடியினர் மணக்கோலத்தில் தங்களது குடும்பத்தினருடன் வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். புது மண ஜோடிகள் தங்கள் கழுத்தில் பண மாலையை அணிந்தவாறு வந்து வாக்களித்ததை அங்கிருந்தவர்கள் வியப்புடன் பார்த்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close