2 மணிநேரத்திற்குள் 53% வாக்குகள் பதிவான உயரமான வாக்குச்சாவடி!

  ஸ்ரீதர்   | Last Modified : 19 May, 2019 02:34 pm
world-s-highest-polling-station-with-49-voters-records-53-voting-in-2-hours

இந்தியாவின் உயரமான வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்தில் 53 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் நிலையில் இறுதிக்கட்டமான 7ம் கட்ட தேர்தல் இன்று விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே மக்கள் வாக்குச்சாவடிக்கு வந்து, வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள தஷிகாங்க் வாக்குச்சாவடி 15 ஆயிரத்து 256 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள 49 வாக்காளர்களுக்காக அங்கு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியவுடன் அங்குள்ள வாக்காளர்கள் கம்பளிகளை போர்த்திக் கொண்டு குளிரையும் பொருட்படுத்தாமல் வந்து வாக்களித்தனர். காலை 9 மணிக்குள் அங்கு 53% வாக்குள் அங்கு பதிவாகியுள்ளன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close