ஹிமாச்சல்: 103 வயதில் 17வது முறையாக வாக்களித்த மூத்த வாக்காளர்!

  ஸ்ரீதர்   | Last Modified : 19 May, 2019 02:34 pm
103-yr-old-shyam-saran-negi-from-himachal-pradesh-s-kalpa-casts-his-vote

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் கின்னார் மாவட்டத்தில் உள்ள கல்பா கிராமத்தைச் சேர்ந்தவர் 103 வயதான ஷியாம் சரண் நேகி. ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் இன்று நடைபெற்ற மக்களவை தேர்தலில் 17வது முறையாக வாக்களித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும், 7 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் நிலையில், மீதமுள்ள 59 தொகுதிகளுக்கான 7ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஹிமாச்சல பிரதேச மாநிலம் கின்னார் மாவட்டத்தை சேர்ந்த கல்பா கிராமத்தை சேர்ந்த 103 வயதான சரண் நேகி என்பவர் 17வது முறையாக தேர்தலில் வாக்களித்து சாதனை படைத்துள்ளார். இவர் 1951ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இதுவரை 16 முறை மக்களவை தேர்தலில் வாக்களித்துள்ளார்.

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக முறையான வாக்காளர் பயிற்சி மற்றும் தேர்தல் பங்கேற்பு திட்டத்தின்படி, தேர்தல்ஆணையத்தின் விளம்பர தூதராக ஷியாம் சரண் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close