பீகார் மாநிலத்தில் தலையொட்டி பிறந்த சகோதரிகள் மக்களவை தேர்தலில் முதல் முறையாக தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த தலையொட்டி பிறந்த இரட்டை பெண்கள் சாபா மற்றும் பாராஹா ஆகியே இருவரும் மக்களவை தேர்தலில் முதன் முறையாக தனித்தனியாக வாக்களித்தனர்.
கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இவர்களுக்கும் சேர்த்து ஒரு வாக்கு மட்டுமே அளிக்கப்பட்டது. ஆனால் இவர்களுக்கு தனித்தனி வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்று மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த பாட்னா மாவட்ட நீதிமன்ற நீதிபதி நேற்று தீர்ப்பு கூறினார். அதில், இரட்டையர்கள் இருவருக்கும் இரண்டு மனநிலைகள் இருக்கும், ஆசைகள், எண்ணங்கள் மாறுபடும் அதனால் இவர்களுக்கு தனித்தனயாக வாக்கு உரிமை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து பாட்னாவில் உள்ள வாக்கு சாவடியில் இரட்டையர்களான சாபா மற்றும் பாராஹா ஆகியோர் தனித்தனியாக தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
newstm.in