குஜாராத்தில் மீண்டும் கதவடைப்பு: கதறும் காங்கிரசார்

  விசேஷா   | Last Modified : 19 May, 2019 06:44 pm
huge-loss-for-congress-in-gujarat

குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளிலும், கடந்த முறையை போலவே இந்த தேர்தலிலும், பா.ஜ., வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இது காங்கிரசார் இடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

குஜராத்தில், 26 மக்களவை தொகுதிகள் உள்ளன. குஜராத் மாநிலத்தை தங்கள் கோட்டையாக வைத்துள்ள பா.ஜ., தொடர்ந்து பல ஆண்டுகளாக அங்கு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று வந்துள்ளது. 

பிரதமர் நரேந்திர மாேடி, 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பு வரை, தொடர்ந்து பல ஆண்டுகள் குஜராத் மாநில முதல்வராக இருந்தார். 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், அந்த மாநிலத்தில் உள்ள, 26 மக்களவை தொகுதியிலும், பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்தது. 

இந்நிலையில், இந்த தேர்தலிலும், குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கதவடைக்கப்படும் என கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளதால், அந்த கட்சித் தலைவர்கள் விரக்தி அடைந்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close