உத்தர பிரதேசத்தில் சறுக்கலை சந்திக்கும் பா.ஜ., 

  விசேஷா   | Last Modified : 19 May, 2019 06:40 pm
set-back-for-bjp-in-uttar-pradesh

நாட்டின் 17வது மக்களவை தேர்தலில், உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜ., சற்று பின்னடைவை சந்திக்கும் என, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. 

உத்தர பிரதேசத்தில், மாெத்தமுள்ள, 80 தொகுதிகளில் கடந்த, 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி, 70க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் மிகப் பெரிய வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் மாநிலத்தில் ஆட்சி அமைத்தது. 

இந்நிலையில், 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அந்த கட்சிக்கு, 45 - 47 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைக்கும் என, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. அந்த மாநிலத்தில் எதிரும் புதிருமாக இருந்து வந்த, மாநில கட்சிகளாகன, சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி அமைத்ததே, பா.ஜ.,வின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. 

முன்னாள் முதல்வர்களான அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி இடையிலான கூட்டணி, பா.ஜ.,வின் வெற்றி வாய்ப்பை அசைத்துப் பார்க்கும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரு கட்சிகளும் சேர்ந்து, 30 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளது. 

மாநில கட்சிகளில் பல முறை போராடியும், அவர்களுடன் கூட்டணி அமைக்க முடியாமல் கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ் கட்சி, வெறும் 2 இடங்களில் மட்டும் வெற்றி பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே கூட்டணி, எதிர் வரும் சட்டசபை தேர்தலிலும் தொடர்ந்தால், பா.ஜ., மீண்டும் தனிப் பெரும்பான்மை பெறுவது சற்று கடினமே. இந்த தேர்தலில், உ.பி.,யை பொருத்தவரை, பா.ஜ.,வுக்கு சறுக்கல் என்றே கூறலாம். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close