கேரளாவில் காணாமல் போகும் கம்யூனிஸ்டுகள்: கால் பதிக்கும் பா.ஜ., 

  விசேஷா   | Last Modified : 19 May, 2019 09:03 pm
congress-will-get-more-seats-in-kerala-huge-fall-down-for-marxist-communist

கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளில், அந்த மாநிலத்தில் தற்போது ஆட்சியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வெறும் மூன்று இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளில் தெரிய வந்துள்ளது. 

காலம் காலமாக அந்த மாநில அரசியலில் கோலாேட்சி வரும் கம்யூனிஸ்டுகள், இந்த தேர்தலில் மிகப் பெரிய தோல்வியை தழுவும் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தேசிய அளவில், காங்கிரசும், கம்யூனிஸ்ட்டுகளும் நண்பர்கள் போன்ற தோற்றத்தை காட்டிக் கொண்டாலும், மாநிலத்தில், இரு கட்சிகளும் வெவ்வேறு துருவங்களாகவே தேர்தலை சந்தித்துள்ளன. 

அதில், காங்கிரஸ் கட்சி, 11 இடங்களில் வெற்றி பெற்று, கம்யூனிஸ்டுகளுக்கு சிம்ம சொப்பணமாக விளங்கும் எனவும் நம்பப்படுகிறது, அதே சமயம், இதுவரை சொல்லிக்கொள்ளும் அளவு வாக்கு வங்கி இல்லா பாரதிய ஜனதா கட்சி, இந்த தேர்தலில், கேரளாவில், 3 இடங்களில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. 

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில், ஹிந்துக்களின் மனநிலையை புரிந்து கொள்ளமலும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமலும், மாநில அரசு செயல்பட்டதாக பல தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் வெளிப்பாடாகவே, கம்யூனிஸ்டுகள் மிகப் பெரிய தோல்வியை சந்திக்க உள்ளதாகவும் கருத்து கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு பெரிய சறுக்கலும், காங்கிரசுக்கு பெரிய எழுச்சியும், பாரதிய ஜனதாவுக்கு புதிய நம்பிக்கையும் தரும் தேர்தல் முடிவுகளாக இது அமையும் என, கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. 
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close