280 இடங்கள் ... தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக!

  கிரிதரன்   | Last Modified : 19 May, 2019 10:54 pm
mp-election2019-bjp-nationalwide-result

ஏழுகட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ள 2019 மக்களவைத் தேர்தலின் முடிவுகள் வியாழக்கிழமை (மே 23) வெளியாக உள்ளன. ஒட்டுமொத்த இந்தியாவே, ஏன் உலகநாடுகளே இத்தேர்தல் முடிவுகளை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் இன்று மாலை முதல் வெளியாகி வருகின்றன.

நியூஸ்டிஎம் -இன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில், பல்வேறு மாநிலங்களில் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில், பாஜக 280 இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும். சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட பாஜகவின் கூட்டணி கட்சிகள் வெற்றிபெற உள்ள 59 தொகுதிகளையும் சேர்த்தால், 339 இடங்களில் வெற்றி வாகை சூடி அசுர பலத்துடன் பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சிக் கட்டிலை அலங்கரிக்க உள்ளது.

அஸ்ஸாம்,திரிபுரா, சிக்கிம் உள்ளிட்ட 8 மாநிலங்களை உள்ளடக்கிய வடகிழக்கு மாநிலங்கள், மகாராஷ்ட்ரா, குஜராத். ராஜஸ்தான் உள்ளிட்ட 6 மாநிலங்களை கொண்ட மேற்கு மண்டல மாநிலங்களில், 2014 தேர்தலைப் போன்றே இந்த முறையும் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும்.

இதேபோன்று பிகார், மத்தியப்பிரதேசம்,  ஹரியாணா, டெல்லி உள்ளிட்ட 11 மாநிலங்களை கொண்ட வடக்கு பிராந்தியத்திலும், பாஜக இம்முறையும் தமது ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ளும்.

அதேசமயம், நாட்டிலேயே அதிகமாக 80 மக்களவைத் தொகுதிகளை கொண்டுள்ள உத்தரப்பிரதேசத்தில், கடந்த 2014 தேர்தலில் பாஜக 70-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியது. அங்கு இம்முறை, இம்மாநிலத்தின் இருபெரும் கட்சிகளான சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ்வாதியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளதால், பாஜகவுக்கு இங்கு வெற்றி வாய்ப்பு சற்று குறைந்து 44 இடங்களில் வெற்றி பெறும்.

உத்தரப்பிரதேசத்தில் ஏற்படவுள்ள சிறு இழப்பை சரிசெய்யும் விதமாக, நாட்டின் கிழக்குப் பிராந்தியத்தில் முக்கிய மாநிலமான மேற்குவங்கத்தில் 21 இடங்களில் இம்முறை பாஜக வெற்றிபெற உள்ளது. அங்கு கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக வெறும் 2 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

பாஜக இன்னமும் ஆதிக்கம் செலுத்த முடியாத தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தும், ஆந்திரம், தெலங்கானாவில் தேவைப்பட்டால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆகிய மாநிலக் கட்சிகளின் ஆதரவை பெற்றும் தெற்கு பிராந்தியத்திலும் தமக்கான இருப்பை பாஜக தக்கவைத்து கொள்ளும். இதுபோன்ற அரசியல் சாணக்கியத்தனமான செயல்பாடுகளால் பாஜகவுக்கு இந்த அமோக வெற்றி மீண்டும் சாத்தியமாகியுள்ளது.

S.Nagarajan, Psephologist

(NMUSSK Media and Data Analytics)

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close