தங்கள் பலத்தை நிரூபித்த திமுக - அதிமுக!

  கிரிதரன்   | Last Modified : 19 May, 2019 08:08 pm
election2019-statewide-tamilnadu

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதியில், வேலூரை தவிர்த்து 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் ஆளும் அதிமுக கூட்டணி 17 இடங்களில் வெற்றி பெறும். இதில் அதிமுக -12, பாஜக -3, பாமக -2 இடங்களை கைப்பற்றும் என நியூஸ்டிஎம் கணித்துள்ளது.

திமுக கூட்டணி 21 தொகுதிகளை கைப்பற்றும். இதில் திமுக -16, காங்கிரஸ் -4, இந்திய கம்யூனிஸ்ட் -1 இடங்களில் வெற்றி வாகை சூடும். கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத நிலையில் நடைபெற்ற இத்தேர்தல் அதிமுக, திமுக ஆகிய இருகட்சிகளுக்கும் முக்கியமானதாக கருதப்பட்டது. இதில் இரு கட்சிகளும் சமபலத்தில் வெற்றி பெற்றுள்ளன என்றே கூற வேண்டும்.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதியை என்.ஆர். காங்கிரஸ் கைப்பற்றும்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close