டெல்லியில் காலியாகும் ஆம் ஆத்மி கூடாரம்!

  விசேஷா   | Last Modified : 19 May, 2019 07:15 pm
aap-will-lose-all-the-seats-in-delhi

நாட்டின் தலைநகர் டெல்லியில், மாெத்தம் 7 மக்களவை தொகுதிகள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் திடீரென அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்த அரவிந்த் கெஜ்ரிவால், தன்னை ஓர் அப்பழுக்கற்ற மனிதர் என காண்பித்துக் கொண்டார். காங்., மற்றும் பா.ஜ., அல்லாத அரசு அமைய வேண்டும் என பிரசாரம் செய்த கெஜ்ரிவால், ஒரு தரப்பினரின் நம்பிக்கைய பெற்று டெல்லி முதல்வராக பொறுப்பேற்றார். 

அவர் யாரை எதிர்த்து அரசியல் செய்தாரோ, தன் ஆட்சி நிலைக்க வேண்டும் என்பதற்காக, அதே காங்கிரஸ் கட்சியின் ஆதரவையும் பெற்றார். ஆனாலும், தன்னை சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுப்பதாக காங்கிரஸ் மீது குற்றம்சாட்டிய அவர், உடனடியாக பதவியை ராஜினாமா செய்து மீண்டும் தேர்தலை சந்தித்தார். 

மீண்டும் நடைபெற்ற தேர்தலில், தனிப் பெரும்பான்மை பெற்ற ஆம் ஆத்மி கட்சி, டெல்லியில் ஆட்சி அமைத்தது. அதன் பின், தன்னை அரசியலில் துாக்கிவிட்ட ஒவ்வொருவரையும் மெது மெதுவாக கழற்றிவிட்டார். சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் சீடராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட கெஜ்ரிவால், பின் அன்னா ஹசாரேவின் விமர்சனத்திற்கு ஆளானார். 

இந்நிலையில், தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலில், ஆம் ஆத்மி எவ்வளவோ முயன்றும், காங்கிரஸ் உட்பட எந்த அரசியல் கட்சியும் அதனுடன் கூட்டணி அமைக்க முன்வரவில்லை. தன்னை அப்பழுக்கற்றவர் என கூறிக் கொண்ட கெஜ்ரிவால், தன் அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள் செய்த தவறுகளை தட்டிக் கேட்க முடியாமலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமலும் தடுமாறி வருகிறார். 

மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தாமல், தொடர்ந்து மத்திய அரசை விமர்சிப்பதிலேயே தன் நேரத்தை செவிட்டார். இது, மக்கள் மத்தியில் அவருக்கும், அவரது கட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. 

இதன் காரணமாக, மக்களவை தேர்தலில், மாெத்தமுள்ள ஏழு இடங்களிலும், அந்த கட்சி படுதோல்வியை சந்திக்கவுள்ளதாக, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதனால், அரசியலில் அசுர வேகத்தில் வளர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் இந்த தேர்தலுடன் காணாமல் போவாரோ என்ற எண்ணத்தை, இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் ஏற்படுத்தியுள்ளன. 

டெல்லியில் ஆம் ஆத்மி மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு இடத்தில் கூட வெற்றி வாய்ப்பு கிடைக்காது என்றும், பா.ஜ., மட்டுமே ஏழு இடங்களிலும் வெற்றி பெறும் எனவும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close