கருத்துக்கணிப்பு புரளியை நம்ப மாட்டேன்: மம்தா பானர்ஜி

  ராஜேஷ்.S   | Last Modified : 19 May, 2019 10:15 pm
i-do-not-believe-in-surveillance-rumor-mamta-banerjee

தேர்தல் கருத்துக்கணிப்பு புரளியை  நம்ப மாட்டேன் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், இந்த கருத்து கணிப்பு குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தேர்தல் கருத்துக்கணிப்பு புரளியை நான் நம்பமாட்டேன். கருத்துக்கணிப்பு புரளி மூலம் ஆயிரக்கணக்கான வாக்கு இயந்திரங்களை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றினைந்து இந்த போரை எதிர்கொள்வோம்’ என்று பதிவிட்டுள்ளார்.
 

newstm.in  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close