தெற்கில் ஆதிக்கம் செலுத்தும் மாநிலக் கட்சிகள்!

  Newstm Desk   | Last Modified : 19 May, 2019 09:55 pm
election2019-south-region

தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம். தெலங்கானா ஆகிய மாநிலங்களையும், புதுச்சேரி, லட்சத்தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களையும், இந்தியாவின் தெற்கு பகுதி, அரசியல்ரீதியாக உள்ளடக்கியுள்ளது.

இதில், தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், வேலூர் தொகுதி தவிர, மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் அதிமுக, திமுக இரு கட்சிகளும் இத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதில், அதிமுக தலைமையிலான கூட்டணி மொத்தம் 17இடங்களில் வெற்றி பெறும் என நியூஸ்டிஎம் கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றது. இதில் அதிமுக -12, பாஜக -3, பாமக -2 இடங்களை கைப்பற்றும்.

திமுக தலைமையிலான கூட்டணி 21 இடங்களில் வெற்றி பெறும் என்றும் இந்தக் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இதில் திமுக -16, காங்கிரஸ் -4, இந்திய கம்யூனிஸ்ட் -1 இடங்களில் வெற்றி பெறும். கடந்த மக்களவைத் தேர்தலில் ஓரிடத்தில் கூட வெற்றிபெறாத திமுகவுக்கு, இந்தத் தேர்தலில் 16 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாஜக 19 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெறும். காங்கிரஸ் - 6, அதன் கூட்டணிக் கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் 2 இடங்கள் என மொத்தம் 8 தொகுதிகளில் தான் வெல்லும் என்று நமது கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

கேரள மாநிலத்தை பொருத்தவரை, அங்கு மொத்தமுள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் 11  இடங்களில் வெற்றி வாகை சூடும். பாஜக, ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா மூன்று இடங்களை கைப்பற்றும் என்று நியூஸ்டிஎம் கருத்துக்கணிப்பு அறுதியிட்டு கூறுகின்றது.

ஆந்திர மாநிலத்தில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 21 இடங்களை கைப்பற்றும். ஆளும் தெலுகு தேசம் கட்சி வெறும் நான்கு இடங்களில் மட்டுமே வெல்லும்.

தெலங்கானாவிலும் மாநில கட்சியான ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டிஆர்எஸ்) தான் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் என தெரிய வந்துள்ளது. இங்கு மொத்தமுள்ள 17 தொகுதிகளில், டிஆர்எஸ் 14 இடங்களில் வெற்றி வாகை சூடும். காங்கிரஸ், பாஜக தலா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெறும் என நமது கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியை என்ஆர் காங்கிரஸும், லட்சத்தீவுகளில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதியை தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கைப்பற்றும்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close