மகாராஷ்ட்ரா, குஜராத், ராஜஸ்தான் ,கோவா ஆகிய மாநிலங்கள் மற்றும் தாமன் -டையு, தாத்ரா நகர் ஆகிய யூனியன் பிரதேசங்களை மேற்கு பிராந்தியம் தன்னகத்தே கொண்டுள்ளது.
இதில், நாட்டிலேயே மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இரண்டாவது பெரிய மாநிலமான மகாராஷ்ட்ராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் பாஜக கூட்டணி 35 இடங்களை கைப்பற்றும். இதில் பாஜக 23 இடங்களையும், சிவசேனா 12 இடங்களையும் பிடிக்கும். காங்கிரஸ் கூட்டணி 13 தொகுதிகளை வெற்றி பெறவுள்ளது. இதில், காங்கிரஸ் 7 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் 6 தொகுதிகளையும் கைப்பற்றும்.
குஜராத்தில் மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகள் அனைத்திலும் பாஜக வெற்றி வாகை சூடவுள்ளது நம் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
ராஜஸ்தானிலும் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில், பாஜக 22 இடங்களை கைப்பற்ற உள்ளது. இங்கு ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் இடங்கள் தான் கிடைக்கவுள்ளது. கோவா மாநிலத்தில் மொத்தமுள்ள 2 தொகுதிகளையும் பாஜக கைப்பற்ற உள்ளது.
மொத்தத்தில் நாட்டின் மேற்கு மண்டலத்தில் மொத்தமுள்ள 103 மக்களவைத் தொகுதிகளில், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 87 இடங்களில் வெற்றிவாகை சூடவுள்ளன.
newstm.in