பாஜகவை வாழ வைக்கும் வடக்கு!

  Newstm Desk   | Last Modified : 19 May, 2019 10:05 pm
mp-election2019-exitpolls-north-region

உத்தரப் பிரதேசம், பிகார், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், பஞ்சாப், ஹரியாணா, டெல்லி, உத்தரகண்ட், ஹிமாசலப் பிரதேசம், ஜம்மு -காஷ்மீர், சத்தீஸ்கர் என, அரசியல்ரீதியாக 11 மாநிலங்களை கொண்ட மிகப்பெரிய பிராந்தியமாக வடக்கு மண்டலம் திகழ்கிறது.

இதில், 80 மக்களவைத் தொகுதிகளை தன்வசம் வைத்துள்ள நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக 44 இடங்களையும், ஆப்னா தளத்துக்கு 2 இடங்களையும் கைப்பற்ற உள்ளன. சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ்வாதி கூட்டணி 32 இடங்களில் வெற்றி பெறும். இதில் இரு கட்சிகளும் தலா 16 இடங்களை கைப்பற்றும். இந்த மாநிலத்தில் காங்கிரஸுக்கு வெறும் 2 இடங்கள் தான் கிடைக்கும்.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் 70 -க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிவாகை சூடிய பாஜகவுக்கு இம்முறை, சமாஜ்வாதி -பகுஜன் சமாஜ்வாதி கட்சிகளின் கூட்டணி காரணமாக சற்று பின்னடைவு ஏற்படும் என நியூஸ்டிஎம் கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றது.

பிகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில், பாஜக கூட்டணி 34 தொகுதிகளில் வெற்றிவாகை சூடவுள்ளன.  காங்கிரஸ் -ராஷ்ட்ரிய ஜனதா தளம் இங்கு வெறும் 5 இடங்களில் தான் வெற்றி பெறும்.

இதேபோன்று, மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 தொகுதிகளில் 23 இடங்களில் பாஜக வெற்றியை ருசிக்க உள்ளது. ஹரியாணாவில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 9 இடங்களையும், தில்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி வாகை சூடவுள்ளது.

வடக்கு மண்டலத்தில், ஒரே ஆறுதலாக பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 13 தொகுதிகளில், காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றி பெறும் என நியூஸ்டிஎம் -இன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

வடக்கு மண்டலத்தில் மொத்தமுள்ள 206 தொகுதிகளில், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 145 இடங்களை கைப்பற்றும். அதாவது  வடக்கு மண்டலத்தில் 70% இடங்களை பாஜக வெற்றிவாகை சூடவுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close