2019 மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தனித்து 57 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும். இதில் அதிகபட்சமாக அக்கட்சி கேரளத்தில் 11 இடங்களிலும், அதற்கு அடுத்தபடியாக பஞ்சாப், தமிழகத்தில் முறையே 6, 4 தொகுதிகளில் வெற்றி பெறும்.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ், இம்முறை அதைவிட சற்று அதிக இடங்களில் வெற்றி பெற உள்ளது அக்கட்சிக்கு சற்று ஆறுதலான விஷயமாக இருக்கலாம். ஆனால், தேர்தல் முடிவுகளை பொறுத்து, மாநிலக் கட்சிகளுடன் கைகோர்த்து மத்தியில் ஆட்சியமைத்து விடலாம் என்ற காங்கிரஸின் கனவு தகர உள்ளது.
newstm.in