107 இடங்கள்...பிரதமரை தீர்மானிக்கும் வாய்ப்பை இழக்கும் மாநிலக் கட்சிகள்!

  கிரிதரன்   | Last Modified : 19 May, 2019 10:49 pm
election2019-influence-of-regional-parties

2019 மக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸுக்கு ஆட்சியமைக்க தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்காது. தொங்கு நாடாளுமன்றம் அமையவே அதிக வாய்ப்புள்ளது. அப்போது, சமாஜ்வாதி, திமுக, தெலுகு தேசம், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் இணைந்து மத்தியில் ஆட்சியமைக்கும் என்ற கருத்து நிலவியது.

இதனை கவனத்தில் கொண்டே, பிரதமர் பதவி தங்களுக்கு தேவையில்லை என காங்கிரஸ் சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. ஏழாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்பே காங்கிரஸ் இந்த அறைகூவலை விடுத்திருந்தது.

ஆனால்,  காங்கிரஸ் 150 இடங்களில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லாத நிலையில், மாநிலக் கட்சிகள் 100 இடங்களை தாண்டி வெற்றி பெற வாய்ப்பிருந்தும், மத்தியில் பாஜக அல்லாத ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற காங்கிரஸ் ஆசை நிராசையாக போகவே வாய்ப்புகள் அதிகம்.

மாநிலக் கட்சிகளில் அதிகபட்சமாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் -21. திரிணாமூல் காங்கிரஸ் -20, திமுக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்  தலா 16, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி - 14 என பிராந்திய கட்சிகள் எல்லாம் சேர்ந்து மொத்தம் 107 இடங்களில் வெற்றி பெறும் என நியூஸ்டிஎம் கணித்துள்ளது.

S.Nagarajan, Psephologist

(NMUSSK Media and Data Analytics)

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close