மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை ஆகவே சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு ஆளுநருக்கு பாஜகவை சேர்ந்த எதிர்கட்சி தலைவர் கோபால் பார்கவா கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமயிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 113 இடங்களை கைப்பற்றியது. பாஜக 109 இடங்களில் வெற்றி பெற்றது.
ஆட்சி அமைக்க 116 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டுமென்பதால் காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாதி 1, பகுஜன் சமாஜ்2 மற்றும் 4 சுயேச்சைகளின் ஆதரவை பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இல்லையென்றும் அதனால் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்குமாறு ஆளுநர் ஆனந்திபென் பட்டேலுக்கு எதிர்கட்சி தலைவர் கோபால் பார்கவா கடிதம் எழுதியுள்ளார்.
newstm.in