பாட்னா சாகிப்பில் சரிவை சந்திக்கும் பிரபல நடிகர்!

  Newstm Desk   | Last Modified : 20 May, 2019 09:22 pm
election2019-bihar-patna-sahib-constituency

பிகார் மாநிலத்தின் விஐபி தொகுதிகளில் ஒன்றான பாட்னா சாகிப்பில், இம்முறையும் பிரபல நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சத்ருகன் சின்ஹா போட்டியிடுகிறார். ஆனால், கடந்த முறை பாஜக சார்பில் போட்டியிட்ட அவர், இம்முறை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அங்கு களம் காண்கிறார்.

2014 -இல் வெற்றியை ருசித்த அவருக்கு, இம்முறை தோல்வி காத்திருக்கின்றது. இத்தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் கண்டுள்ள மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பாட்னா சாகிப்பில் வெற்றிவாகை சூட உள்ளார்.

வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் அமைச்சராக பொறுப்பு வகித்த சத்ருகன் சின்ஹா, பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்தார் என்பதும், அண்மையில் பாஜகவிலிருந்து விலகிய அவர், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close