மத்திய பிரதேசத்தில் மண்ணை கவ்வும் காங்கிரஸ்

  விசேஷா   | Last Modified : 22 May, 2019 11:59 am
huge-setback-for-congress-in-madhya-pradesh

நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மத்திய பிரதேசத்தில், மாெத்தம், 29 மக்களவை தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில், கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், தொடர்ந்து பல ஆண்டுகளாக ஆட்சிக் கட்டிலை அலங்கரித்த பாரதிய ஜனதா கட்சி, மயிரிழையில் ஆட்சியை தவறவிட்டது. 

பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கிடைக்காத நிலையில், சுயேட்சைகள், பகுஜன் சமாஜ், சாமாஜ்வாதி கட்சிகளின் ஆதரவுடன், முதல்வர் கமல்நாத் தலைமையில் காங்., ஆட்சி செய்கிறது. இத்தனைக்கும், காங்கிரஸ் கட்சிக்கும், பாரதிய ஜனதாவுக்கும் இடையே, எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை வெறும் 4 தான் என்பது அதிர்ச்சி அளிக்கும் உண்மை. 

பா.ஜ.,வுக்கு 109 எம்.எல்.ஏ.,க்களும், காங்கிரசுக்கு, 113 எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர். சட்டசபை தேர்தலில் வென்ற மமதையில் காங்கிரசும், மயிரிழையில் ஆட்சியை தவறவிட்டதால் மிக கவனமாக பா.ஜ.,வும் மக்களவை தேர்தலை எதிர்கொண்டன. 

பா.ஜ.,வின் உழைப்பிற்கேற்ப, அந்த கட்சிக் வெற்றி வாய்ப்பு கிடைப்பது உறுதியாகியுள்ளது. இந்த தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி, 23 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி, 6 இடங்களிலும் வெற்றி பெறும் என, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால், அந்த மாநிலத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. 
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close