கர்நாடகத்தில் பா.ஜ.க., மீண்டும் விஸ்வரூபம்!

  விசேஷா   | Last Modified : 22 May, 2019 11:59 am
bjp-will-win-more-seats-in-karnataka

மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் மாெத்தமுள்ள, 28 தொகுதிகளில், பாரதிய ஜனதா கட்சி, 19 இடங்களில் வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், பா.ஜ., ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளாராக போட்டியிடும் நடிகை சுமலதாவும் வெற்றி பெறுவார் என கணிக்கப்பட்டுள்ளதால், பா.ஜ.,வின் பலம், 20 ஆக உயர வாய்ப்புள்ளது. 

அதே சமயம், மாநிலத்தில் ஆட்சி செய்து வரும், காங்., - ம.ஜ.த., கூட்டணிக்கு வெறும் 8 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் 6 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதாதளம் 2 இடங்களிலும் வெற்றி பெறும் என கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

மக்களவை தேர்தல் முடிவுகள், கருத்துக் கணிப்புகளை ஒட்டியே வந்தால், அந்த மாநிலத்தில் மிக விரைவில் ஆட்சி மாற்றம் நிகழ்வது நிச்சயம் என, அரசியல் நிபுணர்கள் கருத்த தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தனிப்பெரும் கட்சியாக இருந்தும் கூட, பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் இல்லாததால், பா.ஜ.,வால் ஆட்சி அமைக்க முடியாத நிலை உள்ளது. 

இந்நிலையில், மக்களவை தேர்தலில், கர்நாடக மாநிலத்தில் பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெறும் பட்சத்தில், அந்த மாநிலத்தில் உள்ள காங்., - ம.ஜ.த., எம்.எல்.ஏ.,க்கள் அணி மாறி செயல்படவும் வாய்ப்புள்ளது. அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தால், அந்த மாநிலத்தில் பா.ஜ., தலைமையில் ஆட்சி அமைய அதிக வாய்ப்புள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close