தேர்தல் ஆணையத்தில் குவிந்த எதிர்க்கட்சித் தலைவர்கள்!

  Newstm Desk   | Last Modified : 21 May, 2019 03:20 pm
oppostion-party-leaders-are-in-cec-delhi

மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடைபெற்றுள்ளதாக கூறி மனு அளிக்க எதிர்கட்சித் தலைவர்கள், டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்றுள்ளனர். 

நாடு முழுவதும் 542 தொகுதிகளில் 7 கட்டமாக நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள்(மே23) நடைபெறவுள்ளது. இந்த சூழ்நிலையில், மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும், இனிமேலாவத வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்கும்படியும் கூறி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்றுள்ளனர். 

மேலும், கொல்கத்தாவில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வருகையின் போது நடைபெற்ற வன்முறை குறித்தும் நடவடிக்கை எடுக்கவும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close