குஜராத் கோட்டையில் இம்முறையும் வெற்றிக்கொடி ஏற்றும் பாஜக!

  கிரிதரன்   | Last Modified : 22 May, 2019 11:58 am
election2019-exitpolls2019-gujarat-gandhinagar-vadodara-constituency

பாஜகவின் கோட்டையாக உள்ள மேற்கு மண்டலத்தில் குஜராத் முக்கியமான மாநிலமாகும். பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம் என்ற நட்சத்திர அந்தஸ்துடன் விளங்கும் குஜராத்தில் மொத்தமுள்ள 26 மக்களவைத் தொகுதிகளிலும் கடந்த முறை பாஜகவே வெற்றி வாகை சூடியது. இதில் வதோதரா தொகுதியில் பிரதமர் மோடியும், காந்தி நகர் தொகுதியில் பாஜக மூத்தத் தலைவர் எல்.கே. அத்வானியும் வெற்றி பெற்றனர்.

இம்முறையும் இந்த மாநிலத்தில் உள்ள மொத்த தொகுதிகளிலும் பாஜக வெற்றிக்கொடி நாட்ட உள்ளது. விஜபி தொகுதிகளான வதோராவில் இம்முறை மோடிக்கு பதிலாக, ரஞ்சன் பென் பாத்தும், காந்தி நகர் தொகுதியில் எல்.கே.அத்வானிக்கு மாற்றாக, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் போட்டியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close