ராகுலுக்கு கை கொடுக்கும் வயநாடு... கேரளாவில் கால்பதிக்கும் பாஜக!

  கிரிதரன்   | Last Modified : 22 May, 2019 11:58 am
election2019-kerala-vip-constituencies

தென்மாநிலங்களில் தேசிய கட்சியான காங்கிரஸுக்கு இன்னமும் கொஞ்சம் செல்வாக்கு இருக்கும் மாநிலம் என்று சொன்னால் அது கேரளா தான். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இம்முறை இங்குள்ள வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டுள்ளதால், தேசிய அளவில் இம்மாநிலம் கவனத்தை ஈர்த்துள்ளது.

முக்கிய வேட்பாளர்கள் என்ற அடிப்படையில், வயநாட்டில் ராகுலை எதிர்த்து பாஜக சார்பில், பாரத் தர்ம ஜன சேனா அமைப்பின் தலைவர் துஷ்சார் வெள்ளப்பள்ளி போட்டியிடுகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் களத்தில் உள்ளதால், மும்முனை போட்டி நிலவும் நிலையில், வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றிவாகை சூடவுள்ளார் என நியூஸ்டிஎம் கணித்துள்ளது.

இதேபோன்று வடகரா தொகுதியி்ல் கேரள மாநில முன்னாள் முதல்வர் கருணாகரனின் மகன் கே.முரளிதரன்  வெற்றிபெற உள்ளார்.

அதேசமயம், காங்கிரஸ் மூத்தத் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூர், திருவனந்தபுரம் தொகுதியில் இம்முறை தோல்வியை தழுவ உள்ளார். இங்கு, பாஜக வேட்பாளாக களமிறங்கியுள்ள  கும்மணம் ராஜசேகரன் வெற்றிக்கனியை பறிக்க உள்ளார். இவர், மிசோரம் மாநில முன்னாள் ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று, பாலக்காடு தொகுதியில் மாநில பாஜக மூத்தத் தலைவர் சி.கிருஷ்ணகுமாரும், பத்தினம்திட்டா தொகுதியில் கே.சுரேந்திரனும் வெற்றிபெற உள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில், அதனை எதிர்த்து ஹிந்து அமைப்புகளை திரட்டி போராட்டம் நடத்தியவர்களில் சுரேந்திரன் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயினும், திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பிரபல நடிகர் சுரேஷ் கோபி, அங்கு காங்கிரஸ் வேட்பாளர் டி.என்.பிரதாபனிடம் தோல்வியை சந்திப்பார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடும் பிரபல நகைச்சுவை நடிகர் இனோசன்ட், சாலக்குடி தொகுதியில் வெற்றி பெறவுள்ளார். அதேசமயம், சிறந்த இளம் நாடாளுமன்றவாதியான எம்.பி. ராஜேஷ், பாலக்காடு தொகுதியில் தோல்வியை தழுவ உள்ளார் என நியூஸ்டிஎம்-இன் கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றது.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில், கேரள மாநிலத்தில் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறாத பாஜக, இம்முறை அங்கு மூன்று மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்று, அரசியல்ரீதியாக தடம்பதிக்க உள்ளதென்பதுதான், கேரளாவை பொருத்தவரையில் இத்தேர்தலில் குறிப்பிடத்தக்க முக்கிய அம்சமாக இருக்கும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close